×

தீபாவளி பண்டிகையையொட்டி கொங்கணாபுரம் வாரச்சந்தையில் 16 ஆயிரம் ஆடுகள் விற்பனை

சேலம்: தீபாவளி பண்டிகையையொட்டி, கொங்கணாபுரம் வாரச்சந்தையில் 16 ஆயிரம் ஆடுகள் விற்பனையானது. இச்சந்தையில் இன்று ₹8 கோடிக்கு வர்த்தகம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர். சேலம் மாவட்டம் கொங்கணாபுரத்தில் வாரச்சந்தை இன்று கூடியது. சேலம், நாமக்கல், தர்மபுரி, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் சுமார் 16 ஆயிரம் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதையொட்டி அதிகாலை முதலே ஆடுகள் விற்பனை களை கட்டியது. வியாபாரிகள் மற்றும் இறைச்சிக்கடைக்காரர்கள் போட்டிபோட்டு ஆடுகளை வாங்கினர்.

10 கிலோ எடையுள்ள ஆடு ₹5,700 முதல் ₹7,500 வரை விலை போனது. 20 கிலோ எடையுள்ள ஆடு ₹11,500 முதல் ₹15,000 வரையும், 30 கிலோ எடையுள்ள கிடாய் ₹16,000 முதல் ₹22,000 வரையும் எல்லா ஆடுகளும் விற்பனை ஆனது. இவை தவிர 5 ஆயிரம் பந்தய சேவல், கோழிகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட நிலையில், பந்தய சேவல் தரத்திற்கு ஏற்ப ரூ.2000 முதல் ரூ.5ஆயிரம் வரையும், கோழி ரூ.400 முதல் ரூ.1500 வரையும் விற்பனை செய்யப்பட்டது. சந்தையில் இன்று ₹8 கோடிக்கு வர்த்தகம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

கடலூர்

கடலூர் மாவட்டம், வடலூரில் வாரந்தோறும் சனிக்கிழமை ஆட்டு சந்தை நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் நாளை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வடலூர், சேத்தியாதோப்பு, குறிஞ்சிப்பாடி, குள்ளஞ்சாவடி, வடக்குத்து, நெய்வேலி, கருங்குழி மேலகுப்பம், மருவாய் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தாங்கள் வளர்த்து வந்த ஆடுகளை இன்று விற்பனைக்காக கொண்டு வந்தனர்.

இதனை வாங்க கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, திருச்சி, சேலம், மதுரை, தேனி, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் புதுச்சேரி மாநிலத்தில் இருந்தும் வியாபாரிகள் வாங்கிச் சென்றனர். ஒரு ஆடு குறைந்த விலை ரூ.5000 முதல் அதிகபட்ச விலை ரூ.12 ஆயிரம் வரை விற்கப்பட்டன. இது குறித்து வியாபாரிகள் கூறுகையில், ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது என்றனர்.

The post தீபாவளி பண்டிகையையொட்டி கொங்கணாபுரம் வாரச்சந்தையில் 16 ஆயிரம் ஆடுகள் விற்பனை appeared first on Dinakaran.

Tags : Konkanapuram Warachanda ,Diwali festival ,Salem ,
× RELATED சேலம் மாவட்ட பாஜ தலைவர் மீது பெண்...